தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு: கோவையில் விவசாயிகள் நடைபயணம்

டிட்கோ அமைப்பின் மூலம் தொழில்பேட்டை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.

விவசாயிகள் நடைபயணம்
விவசாயிகள் நடைபயணம்

By

Published : Dec 5, 2022, 11:54 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர், மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட குப்பனூர், வடக்கலூர், பொகளூர், இலுப்பந்த்தம், அக்கரை செங்கப்பள்ளி, பள்ளேபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 3,731 ஏக்கர் பரப்பளவில் டிட்கோ அமைப்பின் சார்பில் ஜவுளி பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள், இன்று (டிச. 5) அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் இருந்து, கோவை புலியகுளம் கோயில் வரை 34 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

விவசாயிகள் நடைபயணம்

டிட்கோ மூலம் தொழில்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர். பாதயாத்திரையாக நடத்துவந்து புலியகுளம் விநாயகரிடம் மனு கொடுத்து முறையிட்டு வழிபாடு நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டு சென்றார் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details