கோவை: தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, இந்தோனேசியா வியாபாரிகள் பலன் பெறுவதற்காகத் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.200 கோடி செலவு செய்து பாமாயில் இறக்குமதி செய்வது நியாயமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தும் 'தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு' வரும் 14ஆம் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிமலையில் நடைபெறவுள்ளது.
தென்னை விவசாயிகள் கோரிக்கை:கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் இச்சங்கத்தினர் இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.11) நடந்தது. அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, 'கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரியும், தென்னை விவசாயிகளின் இன்னும் பல கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையிலும் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்படவுள்ளது.
இதனிடையே அந்த மாநாட்டுக்கு முன்னதாகவே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில், நியாயவிலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பாமாயில் பதிலாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.