தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த விவசாயிகள் - ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்தல் விவசாயிகள்

விவசாய நிலத்தில் தொழிற்பேட்டை வேண்டாம் எனக் கோரி மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து விவசாயிகள் மனு அளித்தனர்.

coimbatore news  coimbatore latest news  Farmers  Farmers falling at feet of collector  Farmers falling at feet of collector in coimbatore  விவசாயிகள்  கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்  ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்தல் விவசாயிகள்  கோயம்புத்தூர் செய்திகள்
ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்தல் விவசாயிகள்

By

Published : Oct 30, 2021, 8:13 AM IST

கோயம்புத்தூர்: விவசாயிகள் குறைதீர் முகாமானது கடந்த இரு தினங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் அன்னூர்- மேட்டுப்பாளையம் வழியில் திட்கோ (TIDCO) தொழிற்பேட்டை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் 3000 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் கையக படுத்தப்படும் எனக் கூறி, அதனை நிறுத்த வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த விவசாயிகள்

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம், இது குறித்து மனுக்களை அளித்தனர். அப்போது சில விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனுவை அளித்தது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details