கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கைகள் குறித்து ஆலோசனைகளை நடத்தினர். இதில்,
- பருவமழை காலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் பெரும்பாலான மழைநீர் நீர்நிலைகள் மூலம் கணக்கில்லாமல் அண்டை மாநிலங்களுக்கு வீணாகச் சென்று விரயமாவதைத் தடுக்கும் வகையில் சிற்றணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும்,
- பதிமலை பிரதேசத்திலிருந்து நல்லார் வரை இயற்கையாக வரும் நீர் ஊற்றுகளை அந்தந்த வழித்தடங்களிலேயே விட்டுவிட வேண்டும்,
- ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றினால் மலைப்பொழிவு காலங்களில் சோலையார் அணையிலிருந்து நீரார் வரை தண்ணீரைக் கொண்டுசெல்லும் வழித்தடம் குறுகலாக இருப்பதால் அதிகளவு தண்ணீர் விரயமாகிவருகிறது. இந்தத் தண்ணீரை சேமிக்க மாற்று வழியில் இந்த அணையிலிருந்து தண்ணீரை கொண்டும் செல்லும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
- இதனுடன் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் தந்தை பி.கே. பழனிச்சாமியின் மணிமண்டபம் கட்டுவதற்கு அறிவிப்பு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி