தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியைக் கெடுத்த குடி - குடிபோதை தகராறில் விவசாயி 11 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை - farmer was shot dead in kovai

கோவை காரமடை கண்டியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் 11 முறை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி 11 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் விவசாயி 11 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை

By

Published : Oct 9, 2022, 11:06 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியைச்சேர்ந்தவர், சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் திருமணமான இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு (அக் 8) கண்டியூர் பகவதி அம்மன் கோயில் பகுதியைச்சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர், அப்பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போய்விட்டதாகக்கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற சின்னச்சாமி, நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனையடுத்து இன்று (அக் 9) காலை சின்னத்தம்பி துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதாகத்தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள், இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச்சென்ற காவல் துறையினர், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துச்சென்றனர். அதேநேரம் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காரமடை காவல்துறையினர், ரஞ்சித் என்ற இளைஞரிடம் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சின்னச்சாமியின் உறவினர் பேட்டி

இதன் முதற்கட்ட விசாரணையில், சின்னத்தம்பி நேற்றிரவு ரஞ்சித்துடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளதாகவும், அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் சின்னச்சாமியை துப்பாக்கியால் 11 முறை சுட்டுக்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து துப்பாக்கி ரஞ்சித் கைவசம் எப்படி வந்தது? வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கள்ளத்துப்பாக்கியா என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சின்னச்சாமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி - ஜோலார்பேட்டையில் தாய், மகன் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details