பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்கு விளையும் இளநீர், தேங்காய், காயர் பித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலக தென்னை தினம் செப்டம்பர் 2ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஆனைமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி என்பவர் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு பூத்தூவி சிறப்பு பூஜைகள் செய்து, குடும்பத்துடன் வழிபட்டார்.