தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் பாகுபலி யானை - பதறிய வாகன ஓட்டிகள்! - Bahubali Elephant

மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையில் பாகுபலி யானை சுற்றித் திரிந்ததால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

பழகிய பாகுபலி யானை - பதறிய வாகன ஓட்டிகள்!
பழகிய பாகுபலி யானை - பதறிய வாகன ஓட்டிகள்!

By

Published : Aug 9, 2022, 11:33 AM IST

கோயம்புத்தூர்மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக ஒற்றை ஆண் காட்டு யானையான பாகுபலி சுற்றி வருகிறது. இதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நேற்றிரவு பாகுபலி யானை போக்குவரத்து மிகுந்த மேட்டுப்பாளையம் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வர தொடங்கியது. இந்த பாகுபலியின் நடமாட்டம் உள்ளூர் மக்களுக்கு பழகியதால், அவ்வழியே பயணித்த பிற வாகன ஓட்டிகள் பதற்றமடைந்தனர்.

பழகிய பாகுபலி யானை - பதறிய வாகன ஓட்டிகள்!

அதில் சிலர் வாகன ஹாரனை அடித்தபடி கடந்து செல்ல முற்பட்டனர். இதனால் ஆவேசமான பாகுபலி யானை, சாலையோரம் இருந்த ஒரு தோட்டத்து இரும்புக்கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர், பாகுபலி யானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையும் படிங்க:இரண்டு யானைகளுக்கிடையே மோதல்; ஒரு யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details