தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த 2 போலி மருத்துவர்கள் கைது! - duplicate doctor arrested

பொள்ளாச்சி: பொதுமக்களுக்கு 20 ஆண்டுகளாக சிகிச்சை அளித்துவந்த 2 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

-pollachi

By

Published : Nov 9, 2019, 10:49 PM IST

பொள்ளாச்சியில் ’பத்மா கிளினிக்’ என்ற பெயரில் 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் புனே நகரிலிருந்து சிரஞ்சி என்பவர் பத்திராவிடம் ரூபாய் 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி மூலநோய்க்கு சிகிச்சைப் பெற்றுள்ளார்.

சிகிச்சைக்குப்பின் சிரஞ்சியின் உடல்நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அவரது உறவினர் மருத்துவர் ஜானி குமார் பிஸ்வாஸ் என்பவர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பத்ரா மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட மருத்துவ அலுவலர் பாஸ்கரன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பட்டு ராஜா ஆகியோர் பத்திராவின் கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர். இதில், பத்ராவிடம் மருத்துவப் படிப்புகளுக்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பதும் பன்னிரெண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு 20 ஆண்டுகளாக போலிமருத்துவராக செயல்பட்டுவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்த பத்ராவை கைது செய்து அவர் நடத்திவந்த பத்மா கிளீனிக் சீல் வைத்தனர்.

போலி மருத்துவர்கள் கைது

இதேபோன்று, ராமச்சந்திரன் என்பவர் கிட்னி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என்னும் பெயரில் நடத்திவந்த கிளீனிக் மீதும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் அங்கேயும் சோதனை நடைபெற்றது. அப்போது ராமச்சந்திரன் என்பவர் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாரம்பரிய மருத்துவம் என்று பேரில் மக்களை ஏமாற்றிவந்தது தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் காலாவதியான மருந்துகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலி மருத்துவர் ராமச்சந்திரன் நடத்திவந்த கிளினிக்கு வருவாய்த் துறையினர் சீல்வைத்து அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரேநாளில் பொள்ளாச்சியில் இருவேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை: போலி மருத்துவரின் கிளினிக்குக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details