கோயம்புத்தூர்:சுண்டக்காமத்தூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு இளைஞர் ஒருவர் சென்று, 500 ரூபாய் தாள் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கியுள்ளார். ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்ட மேற்பார்வையாளர், அதனை சரிபார்த்த போது அது கள்ள நோட்டு என்று தெரியவந்துள்ளது.
உடனடியாக டாஸ்மாக் ஊழியர்களின் உதவியுடன், இளைஞரை மடக்கிப் பிடித்த மேற்பார்வையாளர், அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவைபுதூர் அறிவாளி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது.