தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர்: சூலூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட தனியார் பேருந்து நடத்துனர், அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Bus conductor commits suicide by hanging!
பேருந்து நடத்துனர் தற்கொலை

By

Published : Aug 26, 2020, 10:47 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் நஞ்சப்பத்தேவர் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அசோகன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (23). தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணகுமார் பள்ளபாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நண்பர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மணிகண்டனுக்கு செந்தமான வீட்டில் வாடகைக்கு, மகாலிங்கம் என்பவர் தனது மனைவி ரங்கநாயகியுடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் மகாலிங்கம் என்பவரது வீட்டில் கிருஷ்ணகுமார் நிர்வாணமான நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் வீட்டில் குடியிருக்கும் மகாலிங்கத்தின் மனைவி ரங்கநாயகியுடன் கிருஷ்ணகுமாருக்கு தகாத உறவு இருந்ததுள்ளது.

மேலும், சம்பவத்தன்று இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதையறிந்த உறவினர்கள் வீட்டை பூட்டியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து ரங்கநாயகி வெளியே வந்துள்ளார். ஆனால், கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

இதனால், அவமானமடைந்த கிருஷ்ணகுமார் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details