தமிழ்நாடு

tamil nadu

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விண்ணப்பம் பெற கடைசி நாள் நீட்டிப்பு

By

Published : Jun 12, 2021, 5:11 PM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழாவிற்கு விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விண்ணப்பம் பெற கடைசி நாள் நீட்டிப்பு
வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விண்ணப்பம் பெற கடைசி நாள் நீட்டிப்பு

கோயமுத்தூர்: இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "42வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழகத்தால் மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவம் பெற கடைசி நாள் ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.tnau.ac.in என்ற இணையதளத்தில் உள்ள இணைப்பு (link) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கட்டணத்தை SBI Collect (The Comptroller, TNAU, Coimbatore) மூலம் செலுத்த வேண்டும்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விண்ணப்பம் பெற கடைசி நாள் நீட்டிப்பு

தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்காலிக பட்டப்படிப்புச் சான்றிதழ் நகல், இணையதளம் மூலமாக வங்கியில் செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான ரசீது, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய 0422-6611506 என்ற தொலைபேசியைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புலிட்சர் விருது பெறுகிறார் தமிழச்சி மேகா ராஜகோபாலன்

ABOUT THE AUTHOR

...view details