பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை உள்ளிட்ட ஆறு தொகுதிகளில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 70.80 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் - pollachi
கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் நேற்று மாலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் இருந்து பாதுகாப்பான முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள பொள்ளாச்சி உடுமலை சாலையில் மகாலிங்கம் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காலை முதற்கட்டமாக பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்போடு அறைக்குள் வைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைத்தனர்.