தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நல்ல கதையம்சம் கொண்ட படத்தை அனைவரும் வரவேற்பார்கள் - நடிகர் ராகவா லாரன்ஸ்

சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால், மக்கள் அதை வரவேற்பார்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

lawrance
லாரன்ஸ்

By

Published : Apr 16, 2023, 5:25 PM IST

கோவை: கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ருத்ரன். அண்மையில் வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில், புதுப்பிக்கப்பட்ட திரையை நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் கதிரேசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், "3 ஆண்டுகளுக்கு பின் ருத்ரன் படம் மூலம் ரசிகர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து நல்ல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்கு முன்பு, இருந்த மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்டது. சிறிய பட்ஜெட் (Low Budget) படமாக இருந்தாலும் நல்ல கதை இருந்தால் அனைவரும் அதனை வரவேற்பார்கள். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும்போது ஜொர்தாலயா பாடலை கேட்டேன். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்து விட்டதால், அந்தப் பாடலுக்கு நான் ஆட வேண்டும் என விரும்பி இயக்குநரிடம் தெரிவித்தேன். தற்போதுள்ள இளைஞர்கள் அவர்களது பாடல்களை யூ-டியூப் போன்ற வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு சிறிய இடைவெளி விட்டு காஞ்சனாவின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம். சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் அனைத்து பணிகளையும் இயக்குநர் பி.வாசு கவனித்துக் கொள்கிறார்.

பலருக்கும் உதவி புரிவதை நான் மட்டும் தான் செய்கிறேன் எனக் கூற முடியாது. நான் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களின் சார்பிலும் தான் உதவி செய்து வருகிறேன். ருத்ரனை யாராலும் அழிக்க முடியாது. அவர் வந்து விட்டார். ருத்ரதாண்டவத்தை ஆடி வருகிறார். இதற்கு சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்’’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: கங்குவா - மாஸ் ஆக பெயர் வைத்த சூர்யா 42 படக்குழுவினர்; மிரளவைக்கும் அர்த்தம்!

ABOUT THE AUTHOR

...view details