தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்ட பழுதை சீர்செய்யும் பணி தொடக்கம்! - கருமத்தம்பட்டி

கோவை: கருமத்தம்பட்டி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் உள்ள பக்கவாட்டு சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல் பாதிப்பு குறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதன் எதிரொலியாக பாலத்தை சரிசெய்யும் பணி நேற்று இரவு தொடங்கியது.

செய்தி

By

Published : Jun 4, 2019, 2:22 PM IST

திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளியில் இருந்து கேரள எல்லையான கோவையை அடுத்த வாளையாறு வரை ரூ.850 கோடி செலவில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அபாயம் குறித்தும் நமது ஈடிவி பாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியின் எதிரொலியால் தற்போது பாலத்தின் சுவர்களில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நேற்று இரவு தொடங்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பேசுகையில், விரிசலை உடனடியாக சரி செய்யும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கும், நெடுஞ்சாலை சுவர்களில் ஏற்பட்ட விரிசல் குறித்து செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீர் செய்யும் பணி இரவில் தொடங்கியது

ABOUT THE AUTHOR

...view details