இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரிக்கு முந்தைய மூன்று நாள்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
தொடங்கியது யக்ஷா கலைத் திருவிழா - esha yoga festival
கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
அதன்படி, இந்தாண்டு ‘யக்ஷா’ விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று (மார்ச். 8) பிரபல ஹிந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தன் பாடல் திறமையால் பிபிசி விருதைப் பெற்றவர். இவரது தந்தை அஜோய் சக்ரபோர்த்தியும் ஹிந்துஸ்தானி பாடகர் ஆவார். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக யூ-டியூப்பில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈஷா சத்குருவின் ஓவியம் ரூ.2.3 கோடிக்கு விற்பனை!