அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் சூலூர் வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கருமத்தம்பட்டியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் கவிழும். துரோகத்திற்கு சிறந்த உதாரணம் எடப்பாடி பழனிச்சாமிதான். பால்காரர் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
'ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதா போல் ஈபிஎஸ், ஓபிஎஸ் தெருத்தெருவாக அலைவார்கள்..!' - டிடிவி தினகரன் - rathakannir
கோவை: "ரத்தக்கண்ணீர் எம். ஆர். ராதா-வை போல் ஈபிஎஸ், ஓபிஎஸ் தெருத் தெருவாக அலைவார்கள் என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
இவர்கள் இருவரும் தேர்தல் முடிந்த பிறகு ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவை போல தெருத்தெருவாக அலைவார்கள். சோமனூரில் நொய்யல் நதி சீரமைக்கப்படும், பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவரப்படும், சோமனூர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிலையம் உருவாக்கப்படும், விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண வசதிகள் செய்து தரப்படும், விசைத்தறி ஜவுளி தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்" என்று, தினகரன் உறுதியளித்தார்.