கோவை: 2014ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் ஸ்ரீ குபேரன் என்ற பெயரில் ஈமு கோழிப் பண்ணை செயல்பட்டுவந்துள்ளது. அப்போது பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை நம்பி பொதுமக்கள் பலரும் அதில் முதலீடு செய்துள்ளனர்.
ஈமு கோழிப் பண்ணை மோசடி - 40 லட்சம் ரூபாய் அபராதம் - covai latest news
ஈமு கோழிப் பண்ணை மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
emu-poultry-farm-fraud-case
ஆனால் முதலீடு செய்த பலருக்கும் செலுத்திய தொகையைத் திருப்பித் தராமல் 62 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.