கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் முகாமிட்டுள்ளன. மேலும் குடியிருப்புகள், சத்துணவு கூடங்கள், நியாயவிலை கடைகள் ஆகியவற்றை யானைகள் சேதப்படுதியுள்ளன. இதனால் வெளியில் செல்லவே அச்சமாய் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக சின்கோனா, ஈட்டியார் சோலையார் அணை, நல்லமுடி, பூஞ்சோலை, ரொட்டிக் கடை, பழைய வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். பகல் நேரங்களில் யானைகள் முகாம் இட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.