கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இயங்கி வரும் தாமரை மகளிர் சுய உதவிக்குழு நியாய விலைக்கடையை மூன்று யானைகள் இன்று (அக்டோபர் 22) அதிகாலை உடைத்து அதிலிருந்த அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவுப்பொருள்களை கலைத்துச் சென்றன.
காட்டில் உணவில்லை: ரேஷன் கடையை சூறையாடிய யானைக்கூட்டம்! - கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை
கோயம்புத்தூர்: ஆனைமுடி எஸ்டேட் தாமரை மகளிர் சுய உதவிக்குழு நியாய விலைக்கடையில் உள்ள உணவுப் பொருள்களை யானைக் கூட்டம் சூரையாடியது.
ரேசன் கடையை சூறையாடிய யானைக்கூட்டம்
இதையறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், இரவு நேரங்களில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவேண்டுமென்று வனத்துறையினர் பொதுமக்களிடம் கூறினர்.
இதையும் படிங்க: நச்சு கழிவுகளால் வாழ்வாதாரம் இழந்த மக்கள் இழப்பீடு கோரி போராட்டம்!