கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் நியாயவிலைப் பொருள்களை வழங்குவதற்காக ரோப்வே பகுதியில் நியாயவிலைக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று (டிச.16) அதிகாலையில் ஐந்து காட்டு யானைகள் இப்பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையின் கதவுகளை உடைத்துக்கொண்டு, உள்ளே இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருள்களை சேதப்படுத்தின.
யானைகள் விரட்டியடிப்பு:
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பல மணி நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள் வனத்துறையினர் ரோந்து:
மேலும், காட்டு யானைகள் அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தொடர்ந்து இன்று (டிச.16) இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். தொடர்ந்து, வனத்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காயத்துடன் இருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை!