கோயம்புத்தூர்:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை, கரடி, காட்டு யானை என பல்வேறு விலங்குகள் வசித்துவருகின்றன. இங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே வனத்தைவிட்டு வெளியேறி ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.