தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி காட்டுயானை பலி! - யானை பலி

கோவை: சிறுமுகை வனப்பகுதி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது.

மின்வேலில் சிக்கி காட்டுயானை பலி!

By

Published : Apr 3, 2019, 7:51 PM IST

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதி அருகே பவானிசாகர் அணை நீர்பிடிப்புப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயி நாசர் அலி குத்தகைக்கு வாழை பயிரிட்டுள்ளார்.

மின்வேலியில் சிக்கி காட்டுயானை பலி!

அந்த தோட்டத்தில் ஆண்காட்டு யானை இறந்து கிடப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், சிறுமுகை வனச்சரகர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாழை தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருக்க, தோட்டத்தை சுற்றிலும் 12 வோல்ட் திறன் கொண்ட பேட்டரியின் உதவியோடு சட்டவிரோதமாக மின்வேலிகளை நாசர் அலி அமைத்திருந்தார் என்பதும், அந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்த வனத்துறையினர், நாசர் அலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details