கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு பகுதியில், வனத்துறையினர் நேற்று (மே.14) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதியில் சோதனையிட்டனர்.
வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் யானை! - கோவை மாவட்ட செய்திகள்
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், வயிற்று பகுதியில் ஆழமான காயம்பட்டு அழுகிய நிலையில் பெண் யானை உடல் கண்டெடுக்கப்பட்டது.
அப்போது 50 வயது மதிக்கத்தக்கத்தக்க பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர், மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், கோவை வனத்துறை மருத்துவர் சுகுமார், வனத்துறையினர் இறந்து கிடந்த பெண் யானையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மருத்துவர் சுகுமார் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இறந்து கிடந்த யானையின் வயிற்றுப் பகுதியில் உள்பக்க தோளில் காயம்பட்டு ரத்தக் கட்டும், அடிவயிற்றின் பகுதியில் சுமார் 3 அடி நீளத்திற்கு காயமும் இருந்ததால், ஆண் யானைகள் தந்தத்தின் மூலம் தாக்கியதில் காயம் ஏற்பட்டு, அதன் பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.