தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த யானை: வனத்துறை விசாரணை - elephant found dead at coimbatore

கோயம்புத்தூர்: உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த யானை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

elephant
elephant

By

Published : Apr 2, 2020, 7:27 PM IST

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட போத்தமடை சுற்று மணியன்சோலை சராகம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலை சுமார் 10 மணியளவில் செருப்புஒட்டி ஓடை என்ற இடத்தில் ஒரு ஆண் யானை உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அருகில் மற்றொரு ஆண் யானை நின்று கொண்டிருந்துள்ளது. இறந்த யானையின் தந்தங்கள் இரண்டும் சேதாரமில்லாமல் நல்ல நிலையில் இருந்தது. வேட்டைக்காரன்புதூர் கால்நடை மருத்துவர் திருக்குமரனால் பிரேத பரிசோதனை செய்து தந்தங்கள் இரண்டும் பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானை

யானையின் உடலை மற்ற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டுள்ளது. உடற்கூறாய்வின்போது துணை இயக்குநர், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details