கோவை மாவட்டம் தடாகத்தை அடுத்த தாளியூர் கிராமத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் ஒற்றை காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
தண்ணீர் தேடி ஊருக்குள் வலம்வந்த அந்த காட்டு யானை , நாகராஜ் என்பவர் வீட்டின் முன்பு டிரம்மில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்தது.
தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில் அருகில் வைக்கபட்டிருந்த பாத்திரங்களிலும் துதிக்கை விட்டு உறிஞ்சிப்பார்த்த யானை, பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றது.