தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகாரித்து வரும் யானைகளின் உயிரிழப்பு! - தமிழ்நாடு

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டியை அடுத்த கூட்டுப்புலிக்காடு என்ற பகுதியில் யானை ஒன்று உயிரிழந்தது. உணவு தண்ணீர் தேடி ஊருக்குள் யானைகள்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

உயிரிழந்த பெண் யானை

By

Published : Aug 28, 2019, 11:57 PM IST

கோவை மாவட்டம் ஆனைகட்டி மாங்கரை தடாகம் பகுதியில் தற்போது ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அண்மையில் பெய்த மழையின் காரணமாக அதிக அளவிலான யானைக் கூட்டங்கள், இந்த பகுதிக்குள் வந்துள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது உணவு தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு வீரபாண்டி பகுதியில் உயிரிழந்த நிலையில், தற்போது ஆனைகட்டி அடுத்த கூட்டுப்புலிக்காடு என்ற பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக மலைவாழ் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கோவை வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கூட்டுப்புலிக்காடு வனப்பகுதிக்குள் சென்று யானை இறந்து கிடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்று தெரியவந்தது.

உடல் நலம் பாதிப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் என்றும், யானையின் உடலை விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், இதன் முடிவில் யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாங்கரை தடாகம் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து வனத்துறையினர் அதிக கவனம் மேற்கொண்டு அந்த பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details