கோவை மாவட்டம், சாடிவயல் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை! - கோயம்புத்தூர் சாடிவயல் செய்திகள்
கோயம்புத்தூர்: சாடிவயல் அருகே யானைகளுக்கு இடையே நடந்த மோதலில், பத்து வயது நிரம்பிய ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.
Elephant died in Coimbatore because of fight
விசாரணையைத் தொடர்ந்து, உயிரிழந்த ஆண் யானைக்கு பத்து வயது இருக்கும் எனவும், வயிற்றுப்பகுதியில் யானைக்குக் காயம் ஏற்பட்டிருந்ததால் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், வேறொரு யானை தாக்கி இந்த யானை உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.