கோயம்புத்தூர்:கடந்த 17ஆம் தேதி தடாகம் மாங்கரை அடுத்த வனப்பகுதியில் 30 வயதுடைய ஆண் காட்டுயானை உயிரிழந்தது. முதலில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்திருக்கலாம் என எண்ணப்பட்ட நிலையில் உயிரிழந்த யானையில் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
யானை உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணமில்லை - தெளிவுபடுத்திய மருத்துவர்கள் - 17ம் தேதி தடாகம் மாங்கரை அடுத்த வனப்பகுதியில் 30 வயதுடைய ஆண் காட்டுயானை உயிரிழந்தது
மாங்கரையில் யானை உயிரிழந்ததற்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
யானை உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணமில்லை- தெளிவு படுத்திய மருத்துவர்கள்
ஆய்வக முடிவுகள் யானை மற்றொரு யானையுடன் நடைபெற்ற மோதல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழக்கவில்லை எனவும் வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வன கால்நடை மருத்துவர்களால் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு இரு தந்தங்களும் பிரித்து எடுக்கப்பட்டு யானையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க:நாய்கள் மூலம் நோய் பரவாது, பீதி அடைய வேண்டாம் - கால்நடை பராமரிப்பு துறை