தடாகம் வனப்பகுதியில் கோவை வனச்சரக அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது பெருமாள் முடி மலை அடிவார பகுதியில் காப்பு காட்டிற்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் யானை ஒன்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் நேற்று காலை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேக எழுந்ததால் ஆந்த்ராக்ஸ் பரிசோதனைக்காக யானையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.