தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை? - Elephant dead due to lungs problem

கோயம்புத்தூர் சிறுமுகை வனப்பகுதியில் நுரையீரல் கோளாறு காரணமாக பெண் யானை ஒன்று உயிரிழந்தது.

உடற்கூராய்வு செய்யப்பட்ட யானை
உடற்கூராய்வு செய்யப்பட்ட யானை

By

Published : Mar 30, 2022, 7:39 AM IST

கோயம்புத்தூர்: சிறுமுகை வனச்சரகம் பெத்திகுட்டை வனப்பகுதியில் சிறுமுகை வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயில்மொக்கை என்ற இடத்தில் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், யானையை உடற்கூராய்வு செய்ததில் உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் இருபது வயது இருக்கலாம் எனவும், நுரையீரல் கோளாறு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது. மேலும், அந்த யானை கடந்த சில தினங்களாக உணவருந்தாமல் இருந்துள்ளதால் அதன் வயிற்று பகுதி காலியாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடற்கூராய்வு செய்யப்பட்ட யானை

கடந்த இரண்டு மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குழந்தை மீது வேனை ஏற்றிய ஓட்டுநர் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details