கோயம்புத்தூர்: நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி இரவு சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் மூன்று காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
இதையடுத்து பெண் யானை கருவுற்று இருந்தது உடற்கூராய்வில் தெரியவந்தது. யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு இதனால் ரயில் மோதி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்நிலையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த இடத்தில் தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் இரவு நேரங்களில் ரயில்வே தண்டவாள பகுதியில் ரோந்து பணியை அதிகரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கோவை: ரயில்மோதி உயிரிழந்த யானை கருவுற்றிருந்தது உடற்கூராய்வில் கண்டுபிடிப்பு