தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் சென்றவர்களை துரத்திய யானைக் கூட்டம்... திக் திக் வீடியோ - காரில் சென்றவர்களை துரத்திய யானை கூட்டம்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் காரில் சென்றவர்களை காட்டு யானைகள் கூட்டம் துரத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

elephant

By

Published : Sep 16, 2019, 10:53 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளான ஆழியார் அணை, ஜீரோ பாய்ண்ட், குரங்கு அருவி பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கூட்டம் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சாலைகளை கடந்து வனப்பகுதிக்குள் செல்கின்றன.

இதனால் இந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த நவமலை பகுதியில் காரில் சென்றவர்களை காட்டு யானைக் கூட்டம் துரத்தியது. இதனால் மிரண்டு போன ஓட்டுநர் காரை வேகமாக இயக்குகிறார். அப்போது காரின் முன்புறம் குட்டியுடன் மற்றொரு காட்டு யானை வந்து நின்றது.

காரில் சென்றவர்களை யானை துரத்தும் காணொலி

பின்னர் காரை நிறுத்திய அந்த வாகன ஓட்டுநர், விளக்குகளை எரியவிட்டு யானைகளை துரத்துகிறார். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து, மெதுவாக காரை இயக்கி அங்கிருந்து வெளியேறினர். இதை ஓட்டுநரின் அருகிலிருந்த நபர் தனது செல்போனில் படம்பிடித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details