கோயம்புத்தூர்:போளுவாம்பட்டி வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.18) நரசிபுரம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வைதேகி நீர்வீழ்ச்சி அருகே உள்ள கழுதை சாலை என்னும் பகுதியில் ஈடுபட்ட ரோந்து பணியின் போது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதாலும், மற்ற யானைகளின் நடமாட்டம் அப்பகுதிகளில் இருப்பதாலும், சோதனை பணியை நாளை தொடருவதாக முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து யானையின் உடல் இன்று (செப்.18) அன்று உடற்கூறாய்வு செய்ய முடிவு செய்யப்பட இருந்ததை அடுத்து, கோவை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர் சுசீந்திரன் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.