தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தாக்கியதில் பாகன் காயம்... மருத்துவமனையில் அனுமதி - கோவை மாங்கரை

பொள்ளாச்சி அருகே யானை தாக்கியதால் காயம் அடைந்த பாகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 18, 2022, 7:42 AM IST

பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சின்னதம்பி, அரிசி ராஜா (எ) முத்து உட்பட 28 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த யானைகள் வளர்ப்பு முகாம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. இந்த முகாமிற்க்கு கோவை மாங்கரையில் இருந்து 21 ஆண்டுகளுக்கு முன் சுயம்பு என்ற யானை கொண்டு வரபட்டது.

யானை தாக்கியதில் பாகன் காயம்

இந்த யானையை பிரசாத், காவடி சுரேஷ் என இருவர் பாகன்கள் பராமரித்து வருகின்றனர். கடந்த பத்து நாட்களாக யானை சுயம்புக்கு மஸ்த்து பிடித்துள்ளது.

இந்நிலையில் யானையை மாற்றி கட்டுவதற்க்காக பிரசாத் அழைத்து சென்ற போது எதிர்பாரத விதமாக அவரை தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்துபிரசாத்தை மீட்டு வனத்துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதையும் படிங்க ; ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு - இடையீட்டு மனு தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details