தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு - யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை யானை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

elephant death
elephant death

By

Published : Mar 5, 2020, 12:59 PM IST

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. கூலித் தொழிலாளியான இவர், நேற்று பணி முடிந்த நிலையில் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.

நரசிபுரம் அருகே காட்டுப்பாதை வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்த இவரை, புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென தாக்கியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்டதில், நிலை குலைந்து கீழே விழுந்த அவரை யானை தனது காலால் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே கிட்டுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்றவர்கள், கிட்டுசாமி உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும், ஆலாந்துறை காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிட்டுசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு யானை தூக்கி கிட்டுசாமி உயிரிழந்ததை உறுதி செய்த காவல் துறையினர், அரசு வழங்கும் நிவார தொகையான நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, அவரின் இறுதிச் சடங்கிற்கு 50 ஆயிரம் ரூபாயை முதல்கட்டமாக வழங்கினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மலைப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும், இரவு நேரங்களில் தேவை இல்லாமல் வெளியே நடமாட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி இறந்த யானையை யாருக்கும் தெரியாமல் புதைத்த விவசாயி

ABOUT THE AUTHOR

...view details