கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரக்கடவு, மூனுக்குட்டை கிராம மக்கள் தங்களுக்கு சாலை வசதி, வாகன வசதி ஏற்படுத்தித் தராததால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தனர்.
இந்த புறக்கணிப்பை தெரிவிக்கும் வகையில் தங்கள் ஊரில் கறுப்புக் கொடி கட்டினர். தங்கள் ஊருக்குச் செல்லவேண்டும் என்றால் ஆனைக்கட்டி மெயின் ரோட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நடந்து செல்ல வேண்டும். முறையான சாலை வசதி இல்லை, அவசர காலங்களில் வாகன வசதி இல்லை, இப்பகுதியில் அதிக யானை நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.