கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக் கேஷ் வேர்ல்ட் மணி என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயராம் என்ற ஊழியர் அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பணத்துடன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.
கோவையில் ரூ.43 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!
கோவை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஒண்டிப்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட அப்பணம் வருமான வரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது ஒண்டிபுதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அலுவலர்கள் ஜெயராம் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அமெரிக்க நாட்டு பணம் 35 ஆயிரம் டாலர், சிங்கப்பூர் பணம் 22 ஆயிரம் டாலர், யூரோ கரன்சி 10,000 இருப்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.43 லட்சத்து 44 ஆயிரத்து 900 ஆகும்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலர்கள்கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டுவந்து ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தின் சார்பில் முறையான ஆவணங்கள் இருப்பதாக கூறி ஜெயராம் பறக்கும் படை அலுவலர்களிடம் ஆவணங்களை ஒப்படைத்தார். எனினும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதால் பணத்தை வருமான வரித்துறையிடம் பறக்கும் படை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.