தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு! - முதியவர் உயிரிழந்தார்

கோவை: மருதமலை அடிவாரத்தில் யானை தாக்கியதில் காவல் பணியில் இருந்த முதியவர் உயிரிழந்தார்.

யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

By

Published : Dec 28, 2020, 10:08 AM IST

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் காவலாளியாக(வாட்ச்மேன்) பணியாற்றி வந்தார். நேற்றிரவு (டிச.27) பணியிலிருந்த அவர், இன்று (டிச.28) காலை ஆறு மணியளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள பேக்கரி கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது திடீரென சட்டக்கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, முகமது நியாஸை தும்பிக்கையால் தாக்கியதோடு, தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

யானை தாக்கிய சம்பவத்தை, அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த கோவை வனத்துறையினர், சம்பவ இடத்தில் கிடந்த முகமது நியாஸ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்மையில் நரசிபுரம் பகுதியில் இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:15 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details