கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாமோதரசாமி (86) - லட்சுமி (80) தம்பதி. இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தனர்.
மகன் மீது மாவட்ட ஆட்சியரிடம் வயதான தம்பதி புகார் - கோவை மாவட்ட செய்திகள்
கோயம்புத்தூர்: சொந்த வீட்டின் மூலம் வரும் வாடகை பணத்தை தரமறுப்பதாக மகன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார் அளித்தனர்.
பணத்தை தர மறுப்பதாக மகன் மீது வயதான தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "தங்களது பூர்வீக நிலத்தில் கிடைக்கப்பெறும் வாடகை கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்கள் மகன் கார்த்திகேயன் இனி வாடகை பணத்தை நீங்கள் வாங்கிக் கொள்ளக் கூடாது, நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறுகிறார். வாடகை பணத்தை கேட்டாலும் எங்களை துன்புறுத்துகிறார். எனவே, மகன் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
பின்னர் வயதான தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து சென்றனர்.