கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு, சுற்றுலாக்காக திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி புவனேஷ்வரன், அவரது 8 வயது மகள் வர்சா, குடும்பத்தினர் இலக்கியா, சபரீஸ், பிரியா, யுவராஜ், துர்கா ஆகியோருடன் வந்தார்.
ஆழியாறு அணையை பார்வையிட்ட பின்பு மேல்மட்ட பாலத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்தில் புகுந்தது.
அதில் திருப்பூர் புவனேஷ்வரன் குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர், சிறுமி வர்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியாறு காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.