கோயம்புத்தூர்: கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த கவுரிஉதயேந்திரன் - விப்ரஜா தம்பதியின் மகள் பிரகதி (8).
பிரகதி அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது மூன்று வயது முதலேயே சிலம்பம் மற்றும் குங்பூவில் ஆர்வமுடன் ஈடுபட்ட இவர், தற்போது சர்வதேச அளவில் சிலம்பம், இரட்டைச் சுருள்வாள் வீச்சு, கம்புச் சண்டை, கம்பு ஜோடி எனப் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி எனப் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.