தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தியாளர்களை கண்டு தெறித்தோடிய செங்கோட்டையன்! - sengottayan

கோவை: விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை பார்த்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sengotyyan

By

Published : Jun 4, 2019, 9:20 PM IST

தமிழ்நாடு அரசின் புதிய பாடத்தின் படி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு, 12ஆம் வகுப்பு பொதுத் தமிழ் பாட புத்தக அட்டையில் இடம் பெற்றுள்ள பாரதியார் வெள்ளை முண்டாசுக்கு பதில் காவி நிறத்திலான முண்டாசு கட்டியிருப்பதாக வடிவமைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் சில நாட்களாக மும்மொழி கொள்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் செல்ல விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.

அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப பத்திரிக்கையாளர்கள் முயன்றபோது அங்கிருந்து வேறு வழியாக திரும்பி சென்ற அமைச்சர், தனது காரை ஏற்கனவே நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து அப்பகுதிக்கு வரவழைத்தார். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் கட்சியினர் புடைசூழ அங்கிருந்து ஓடியவர் காரில் ஏற முயன்றார். அப்போது மும்மொழி கொள்கை குறித்து கேள்வி எழுப்பியபோது "வம்பில் மாட்டி விட வேண்டாம்... எல்லாம் அமைதியாக போயிட்டு இருப்பதாக.." சொல்லிவிட்டு சென்றார்.

செய்தியாளர்களை தவிர்த்த அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பொதுவாக நிதானமாக கலந்துரையாடும் பள்ளிக்கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன், இது குறித்து பதில் அளிக்காமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஓடிச் சென்றது வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details