தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைக்குச் சேர்ந்து பத்து நாள்களுக்குள் உயிரிழந்த கேங்மேன் - EB worker died at coimbatore

கோவை: மின் கம்பத்தில் பழுதை சரிபார்த்துக்கொண்டிருந்த கேங்மேன், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

eb worker
கேங்மேன்

By

Published : Mar 12, 2021, 8:17 AM IST

கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சக்தி நகரில் மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க பத்மநாபன், கணேசன், சாய் சந்துரு ஆகியோர் சென்றுள்ளனர். இதில் சாய் சந்துரு (22) மின்கம்பத்தில் உரிய உபகரணங்களை அணிந்தவாறு பழுதை சரிசெய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கம்பத்திலேயே மயங்கிய படி சாய்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த அவருடன் பணிபுரிபவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து, அவரது உடல் உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாய்சந்துரு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தான், ஜோதிபுரம் பிரிவு அலுவலகத்தில் கேங்மேன் பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்து ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் இளைஞர் உயிரிழந்தது குடும்பத்தினரிடையேயும், மின்வாரிய பணியாளர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உரிய ஆவணம் இருந்தும் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details