தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை! - தமிழ்நாடு- கேரள எல்லையான கோபாலபுரம்

கோவை: பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு - கேரள எல்லை கோபாலபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

DVAC raid at pollachi RTO office
DVAC raid at pollachi RTO office

By

Published : Dec 12, 2020, 2:46 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு- கேரள எல்லையான கோபாலபுரத்தில் அமைந்துள்ளது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி. பொள்ளாச்சியிலிருந்து கோபாலபுரம் வழியே தினசரி நூற்றுக்கணக்கான லாரிகள், டெம்போ, ஆட்டோக்களில் பொருட்கள் கேரளாவிற்கும், அதேபோல் கேரளாவிலிருந்து கோபாலபுரம் வழியாக தமிழ்நாடு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு இந்த சோதனைச்சாவடியில் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக புகார் இருந்துவருகிறது.

இந்நிலையில், நேற்று (டிச. 11) இரவு லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர்கள் எழிலரசி, பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கோபாலபுரம் சோதனை சாவடியை மாறுவேடத்தில் வந்து கண்காணித்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுநர்களிடம் கூடுதல் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இன்று (டிச. 12) அதிகாலை ஆர்டிஓ சோதனை சாவடிக்குள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 50 ஆயிரத்து 200 தொகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், இடைத்தரகர் அம்ராம்பாளையத்தை சேர்ந்த நாசர் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க...முதுநிலை மருத்துவம் முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் - உபி அரசு!

ABOUT THE AUTHOR

...view details