தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கனமழை - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு! - tree fell down

கோவை: நான்கு நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன, இதனை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை

By

Published : Aug 10, 2019, 9:22 PM IST

கோவையில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்களை கடும் சிரமத்திற்கு இடையே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையின் முக்கிய பகுதியான ப்ரூக் ஃபீல்ட் சாலையின் நடுவே மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இதில் சேதமடைந்தது.

கோவையில் கனமழை - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ப்ரூக் ஃபீல்ட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. இதனை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டனர். மழையின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details