மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோயம்புத்தூர், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குரங்கு அருவியில் ஏற்கனவே சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிப்பதற்கு வசதியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரும்புக் கம்பி தடுப்புகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.
தற்போது மழை தாக்கம் அதிகம் இருப்பதால், விரைவில் குரங்கு அருவியில் வெள்ளம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி தடுப்புகள் சேதமடையும் என எண்ணி அத்தடுப்புகளை வனத்துறையினர் தற்போது அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரும்பு கம்பிகளை அகற்றும் வனத் துறையினர் தொடர் கனமழை காரணமாக குரங்கு அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால், ஆழியார் அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க:நீலகிரியில் 2ஆவது நாளாக மழை: பழங்குடியின மக்களுக்கு முகாம் அமைப்பு