தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள் - வாகன ஓட்டிகள் அவதி!

Coimbatore rain: கோவையில் நேற்று (டிச.08) இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, நகரின் முக்கியமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரின் முக்கிய மேம்பாலங்களின் கீழ் வெள்ளம் சூழ்ந்தது.

due-to-heavy-rain-in-coimbatore-the-roads-were-flooded
வெள்ளத்தில் மூழ்கிய பாலங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 10:06 AM IST

Updated : Dec 9, 2023, 12:16 PM IST

கோவையில் கனமழை

கோயம்புத்தூர்:கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், கோவையில் நேற்று (டிச.08) இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மாநகரப் பகுதிகளிலும், புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கோவையின் சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

குறிப்பாக, அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி முழுவதுமாக மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லங்கா கார்னர் மேம்பாலமும், கிக்கானி ரவுண்டானாவும், சிங்காநல்லூர் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து அவினாசி சாலை மேம்பாலத்தில் தேங்கியுள்ள மழை நீர் ராட்சத மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டது.

மேலும், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சிப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் எதிரொலி; வாகன ஓட்டிகள் மீதான 6,670 வழக்குகள் ரத்து - போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Last Updated : Dec 9, 2023, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details