தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவர் மீது ஏறி 'குடி'மகன் ரகளை! - காவல் துறை விசாரணை - செல்ஃபோன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குடிபோதையில் செல்ஃபோன் டவர் மீது ஏறி ரகளை
குடிபோதையில் செல்ஃபோன் டவர் மீது ஏறி ரகளை

By

Published : May 23, 2020, 4:42 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி குமார். இவர் நீண்ட நாள்களாக மது குடிக்காமல் இருந்த நிலையில், இன்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அருகிலிருந்தவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி பொள்ளாச்சி வடக்கிபாளையம் சாலையிலுள்ள தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்விடுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கிபாளையம் காவல் துறையினர், குடிபோதையில் இருந்த குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டவர்

சுமார் ஒரு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வழியாக அவர் கீழே இறங்கிவந்தார். இதையடுத்து அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் செல்போன் கோபுரத்தில் தீ விபத்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details