கோவை மாவட்டம், மருதமலை அருகே வனப்பகுதியில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரு மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு, கேரளா வனப்பகுதிகளில் அந்த யானை மாறிமாறி இடம்பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கேரள வனப்பகுதியில் பிடிபட்ட மக்னா யானைக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர்.
வனத்துறையினர் கண்காணிப்பில் காயம்பட்ட மக்னா யானை! - வாயில் காயம்பட்ட மக்னா யானை
கோவை: வாயில் காயம்பட்ட மக்னா யானைக்கு மருந்து கலந்த உணவு கொடுத்து வனத் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் தமிழ்நாடு வனப்பகுதிக்குள் யானை வந்ததை அடுத்து, கோவை வனத் துறையினர் யானையைக் கண்காணித்துவருகின்றனர். தொடர்ந்து மூன்று நாள்களாக வைக்கப்பட்ட மருந்து கலந்த உணவை யானை உட்கொண்டுவந்தது தெரியவந்தது. இதனிடையே, சின்னத்தடாகம் பகுதியில் சுற்றித் திரிந்த யானை மூன்று குடிசைகளைச் சேதப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சின்னத்தடாகம் பகுதியில் உள்ள பொது மக்கள் கவனமாக இருக்குமாறு வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். காயம்பட்ட மக்னா யானையை வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.