தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் ட்ரோன் பறக்கத் தடை - drones banned in Coimbatore

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு இன்றுமுதல் கோயம்புத்தூரில் ட்ரோன் பறக்கத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரோன் பறக்க தடை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

By

Published : Aug 3, 2021, 9:15 AM IST

கோயம்புத்தூர்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு இன்றுமுதல் (ஆகஸ்ட் 3) 6ஆம் தேதி வரை ட்ரோன் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் நீலகிரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று கோயம்புத்தூர் சூலூர் விமான நிலையத்திற்கு வருகைதரவுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி சூலூர் விமானப் படைத்தளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்றுமுதல் 6ஆம் தேதிவரை ஆளில்லா விமானம் (ட்ரோன்) பறக்கத் தடைவிதிக்கப்படுகிறது. மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'யானை-மனித மோதல்' - 3 ஆண்டுகளில் 301 யானைகள் மரணம்

ABOUT THE AUTHOR

...view details